Politics
TN Assembly Live Updates | ஆட்டோ கட்டணம் விரைவில் உயர்வு? சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு.!
Tamil Nadu Assembly Live Updates | தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக்கோரிக்கை மீதான விவாத்தின் நேரலை அப்டேட்கள் உடனுக்குடன்...

ஆட்டோ கட்டணம் விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது. கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கோரிய ஆட்டோ ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவதை உறுதி செய்யவும் நடவடிக்கை – அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
எங்களின் கோரிக்கை மத்திய அரசும் மாநில அரசும் ஒன்று சேர்ந்து BC MBC பிரிவுகளில் SC STக்களுக்கு உள்ளது போல் மாநில அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்தியாவில் தமிழகத்தில் 69 சதவீதம் இடஒதுக்கிடு கொடுத்து வருகிறோம். எந்த சாதி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளது. எந்தி சாதியில் பெண்கள் படிப்பு அறிவு இல்லாமல் உள்ளனர். சமூக நீதி கணக்கெடுப்பை தமிழகத்தில் மேற்கொள்வோம். மத்திய அரசிற்கு எங்களுக்கு கோரிக்கை உள்ளது. அந்தெந்த மாநிலங்களுக்கு ஏற்ற வாறு சாதி வாரி கணக்கெடுப்பு இருக்கும். சமூக நீதி என்றால் சம மரியாதை கொடுப்பது என நினைத்து வருகிறார்கள். ஆனால் ஒரு சமத்துவமான வாய்ப்பு கொடுப்பது தான் சமூக நீதி – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
இந்த அவையில் சமூக நீதிக்காக குரலை கொடுத்து வருகிறோம். தமிழ்நாடு மட்டுமல்ல முன்னாள் பிரதமர் நேரு சமூக நீதிக்காக போராடி உள்ளார். 1978 பீகார் முதலமைச்சர் தாக்கூர் மற்றும் முன்னாள் பிரதமர் விபி சிங் ஆகியோர் சமூக நீதிக்காக தனது முதலமைச்சர் மற்றும் பிரதமர் பதவிகளை ராஜினாமா செய்து உள்ளனர். ஒன்றிய அரசின் புரிதலுக்கும் தமிழக அரசின் புரிதலும் வேறு வேறு. 1931 வரை சாதி வாரி கணக்கெடுப்பை ஆங்கிலேயர்கள் முன் எடுத்தனர். தமிழ்நாட்டில் பெரியார் அண்ணா காமராஜர் போராடி உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது ஏன் அவசியம் – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
2013 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 2024 ஆம் ஆண்டு ஆசிரியர் ஆசிரியர் இல்லாத பணியாளர்களுக்கு 50 சதவீத ஓய்வூதிய பணி பலன், வழங்கப்பட்டு விட்டது. 2024 செப்டம்பர் மாதம் முதல் 224 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இந்த பிரச்சனை குறித்து பதிவாளர் உடன் இரண்டு முறை விவாதிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பிரமோஷன் கிராஜுவிட்டி விரைவில் கிடைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விஸ்வநாதன்
அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுடைமை ஆக்கப்பட்ட பின் ஊழியர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும். விளக்க குறிப்பை படித்துப் பார்த்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வு பெற்ற ஆசிரியர் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள பண பலன்களை வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் 7வது ஊதிய குழு பணங்களை வழங்க வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரப்பட்ட படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே படித்தவர்கள் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதை கொடுக்க வேண்டும். சிறப்பு கவனத்திற்கு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் – தமிமுன் அன்சாரி
சட்டப்பேரவையின் கடைசி நாள் என்பதால் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
மாறன் அவர்களுக்கு Stamp வெளியிடும்போது தற்போதைய முதலமைச்சர் சென்று அதனை வெளியிட்டார். அந்த மாறன் இடத்தில் இருந்து பல திரைப்படங்களில் முதலமைச்சராக நடித்திருக்கிறார் ஆனால் அவரை பற்றி நேற்று கொச்சைப்படுத்தும் விதமாக முதலமைச்சர் பேசியிருக்கிறார். சர்காரியா கமிஷன் ஆதாரம் இல்லாத நிலையில் எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்காத போது அதை அவையில் படித்துக் காட்டுவது தவறு. நாங்கள் ரியல் ஆட்சி நடத்தினோம். அவர்கள் ரீல்ஸ் ஆட்சியை நடந்தி வருகிறார்கள். முடிந்து போன விஷயத்தை சட்டப்பேரவையில் பேசி ரீல்ஸ் போடுவது தான் அவர்களின் நோக்கம் – எ.வ.வேலு
அதைப் பற்றி பேசக்கூடாது என விதி இருக்கும்போது முதலமைச்சர் அமலாக்கத்துறையை பற்றி பேசி இருக்கிறார். மிசா பற்றி பேச ஆரம்பித்தார் அவர் நடிகர் என்பதால் அவர் கூறிய body language செய்து காட்டினார். எங்கள் தலைவரின் தியாகத்தை கொச்சைப்படுத்தினார். சர்காரியா கமிஷன் குறித்து முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பல முறை பேரவையில் பேசி உள்ளனர். எம்ஜிஆர் தனக்கு எதுவும் என தெரியாது என ஏற்கனவே கூறி உள்ளார். மாறன் பற்றியும் அவையில் பேசினார். கமிஷனில் ஆதாரம் இருந்திருந்தால் நீதிமன்றம் சென்றிருக்கும் ஆனால் நாங்கள் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குவிற்கு முதலமைச்சர் வழி சொல்கிறார் – எ.வ.வேலு
மானிய கோரிக்கை தொடர்பாக பேசும்போது சட்டம் ஒழுங்கு பற்றி முதலமைச்சர் பேச வேண்டும் ஆனால் அதைப்பற்றி முதலமைச்சர் பேசவில்லை தமிழகத்தில் பல கொலைகள் நடந்துள்ளது. தமிழகத்தில் நடந்த கொலைகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்வார் என எதிர்பார்த்தோம். நேற்று முதலமைச்சர் 27 நிமிஷம் பேசிக் கொண்டிருந்தார் நாங்கள் அமைதியாக தான் இருந்தோம். சட்டமன்ற விதி 92 என்ன சொல்கிறது என்றால் நீதிமன்றத்தில் உள்ளதை அவையில் விவாதிக்க கூடாது என உள்ளது – எ.வ.வேலு
திமுகவை அசிங்கப்படுத்தும் நோக்கத்தோடு பொய்யான செய்திகளை ஒரு மணி நேரம் சினிமா பாணியில் நேற்று முதலமைச்சர் சொல்லி முடித்தார். அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும் என கூறியபோது பேரவை தலைவர் அதற்கு அனுமதி மறுத்து விட்டார். மிசா பற்றி முதலமைச்சர் பேசியுள்ளார். தொடர்ந்து தவறான தகவல்களை அவையில் முதலமைச்சர் கூறி வருகிறார். அதற்கு நாங்கள் பதில் சொல்லும் முயலும் போது எங்களை அவையில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள்- கே.என்.நேரு
அவை காவலர்களை வைத்து திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவை காவலர்கள் திமுக உறுப்பினர்களை வெளியேற்றி வருகின்றனர்.
ஏற்கனவே அவையில் பேசியதை தான் முதலமைச்சர் பேசி உள்ளார். மிசாவில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கைது பற்றி பேசி உள்ளார். மாறன் பற்றியும் ஏற்கனவே அவையில் பேசி உள்ளதை தான் முதல்வர் பேசி உள்ளார். அமலாக்கத்துறை என்ன சொல்லி உள்ளது என்பதை தான் முதலமைச்சர் பேசி உள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. முதலமைச்சர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க அவசியம் இல்லை – பேரவை தலைவர்
EDயில் வழக்கு உள்ளதை பற்றி பேரவையில் முதலமைச்சர் பேசி உள்ளார். நேற்றை எங்களை பேச அனுமதி அளித்து இருந்தால் முதலமைச்சர் இருக்கும் போதே நாங்கள் பதில் அளித்து இருப்போம். முதலமைச்சர் பேசியது நியாயம் அல்ல – கே.என்.நேரு
சர்காரிய கமிஷன் பற்றி முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பேரவையில் பேசி உள்ளார். எனவே அதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டாம் – அவை முன்னவர்
முதலமைச்சர் அனைத்து விஷயங்களையும் கவனித்து வருகிறார் என ஏற்கனவே கூறி இருந்தேன். உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். முதலமைச்சர் பேச தொடங்கியதும் போஸ்டர் எடுத்து வந்து காண்பித்தீர்கள். ஒரு நொடி கூட முதலமைச்சர் பேச்சை நீங்கள் கேட்கவில்லை – பேரவை தலைவர்
திமுக திட்டம் அவங்க பேசுவதை நாங்கள் கேட்கணும். நாங்க பேசும் போது அவர்கள் கேட்கமாட்டார்கள். நாங்களும் எழுந்து நிற்கட்டுமா என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச, பொதுப்பணி அமைச்சர் அப்படி பேசக்கூடாது. நேற்று முதலமைச்சர் பேசிய போது எப்படி அமைதிகாத்தீர்கள் என்று சபாநாயகர் அறிவுரை வழங்குகிறார்.
அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எங்க எங்க எல்லாம் ஆதராம் இருக்கிறதோ அதை குறிப்பிட்டு தான் முதலமைச்சர் பேசி உள்ளார். சர்காரியா கமிஷ்னில் கலைஞர் payment வாங்கியது எல்லாம் இருக்கு. மிசா குறித்து நிறைய பேசி உள்ளது. மிசா வழக்கில் வழிப்பறி வழக்கு உள்ளது கொள்ளை வழக்கு உள்ளது. பல வழக்குகள் உள்ளது எல்லாமே மிசா வழக்கு என கூற முடியாது. பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக தான் மு.க.ஸ்டாலின் கைது என தான் இருக்கும் மிசா குறித்து ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என எந்த குறிப்பும் இல்லை – அமைச்சர் நிர்மல்குமார்
மிசா பற்றி முதலமைச்சர் பேசினார். எங்கள் தலைவர் 60 ஆண்டுகள் பொது வாழ்க்கைக்கு சொந்தகாரர். மிசா வில் சிமரங்களை சந்தித்தார். சர்காரிய கமிஷன் குறித்து சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பல முறை பேசி உள்ளார். இறந்தவர்கள் பற்றி பேரவையில் பேச கூடாது ஆனால் அதை நேற்று முதல்வர் பேசினார். மாறன் பற்றி அவையில் பேசியது தேவையில்லாதது. இன்றயை முதலமைச்சருக்கு மாறன் குடும்பம் நெருக்கமான குடும்பம். பல படங்களில் நடித்துள்ளார். முதலமைச்சர் ஆதாரம் இல்லாமல் வெளியில் உள்ள நபர்கள் பற்றி பேசி உள்ளார். முதலமைச்சர் பேசிய விஷயங்களை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் – எ.வ.வேலு
எதிர்கட்சிகள் சில விஷயங்களை சுட்டிக்காட்டி தான் பேசுவோம். முதலமைச்சர் பேசும்போது நேற்று 26 நிமிடம் அமைதியாகத்தான் இருந்தோம். முதலமைச்சர் பேசிய முழு பேச்சை பார்த்தால், நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய தகவலை எடுத்து பேசினார். அது அவை மரவு கிடையாது – எ.வ.வேலு
