`என் மகனை உண்மையிலேயே காதலிக்கிறாய் எனில் தூக்கில் தொங்கு' - விபரீத முடிவெடுத்த மாணவி; பெண் கைது
A 38-year-old woman has been arrested in Gujarat for abetting the suicide of a 12-year-old schoolgirl who was in love with her son.
குஜராத்தில் தனது மகனை காதலித்த 12 -வது படிக்கும் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய 38 வயது பெண் கைது செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த 17 வயது மாணவர், தான் படிக்கும் பள்ளியில் 12வது வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி போன் மற்றும் மெசேஜ் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இருவருமே மைனர்கள் ஆவர். அவர்களின் இந்த காதல் விவகாரம், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாணவியின் வீட்டிற்கு தெரிய வந்தது. உடனே மாணவியின் பெற்றோர் மாணவன் வீட்டிற்கு சென்று படிப்பில் கவனம் செலுத்தும் படி கூறிவிட்டு வந்தனர். அப்படி இருந்தும் இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் இருவரும் சேர்ந்து இருப்பதை பள்ளி முதல்வர் பார்த்தார்.
உடனே இருவரது பெற்றோரையும் அழைத்து இது தொடர்பாக தெரிவித்தார். இதனால் மாணவனின் தாய் நேஹா கோபமடைந்து தனது மகனை அழைத்துக்கொண்டு மாணவியின் வீட்டிற்கு சென்றார். வீட்டில் மாணவியின் பெற்றோர் இல்லை. மாணவி மட்டுமே இருந்தார்.




