கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியை கொடுமைப்படுத்திய தோழிகள்: கையில் கற்பூரம் ஏற்றி துன்புறுத்தல்
கள்ளக்குறிச்சி,மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றியும், துடைப்பத்தால் அடித்தும் கொடுமைப்படுத்திய தோழிகள்
மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றியும், துடைப்பத்தால் அடித்தும் கொடுமைப்படுத்திய தோழிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இதயா மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வாணாபுரம் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி முதலாம் ஆண்டு சி.எஸ்.இ. படித்து வருகிறார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார்.
அவருடன், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவி, வாணாபுரம் பகுதியை சேர்ந்த பி.டெக் முதலாம் ஆண்டு மற்றும் சி.எஸ்.இ. முதலாம் ஆண்டு படிக்கும் 2 மாணவிகள், கடலூர் பகுதியை சேர்ந்த பி.டெக். முதலாம் ஆண்டு மாணவியும் விடுதியில் தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது.



