பேய் பிடித்ததாக டார்ச்சர் 4 மாணவியர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: தனியார் பொறியியல் கல்லுாரி விடுதியில் தங்கி பயிலும் மாணவிக்கு பேய் பிடித்ததாக கூறி, சக மாணவியர் துன்புறுத்தியது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி விடுதியில் தங்கி, முதலாமாண்டு பயிலும் மாணவிக்கு, பேய் பிடித்துள்ளதாக கூறி, அவருடன் தங்கியுள்ள சக மாணவியர் நான்கு பேர் துன்புறுத்தி உள்ளனர்.
பேய் பிடித்ததாக கூறி, அந்த மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றி, தாக்கியதுடன், இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி நடந்த சம்பவம் தொடர்பாக, சின்னசேலம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி, நான்கு மாணவியர் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.