கிராப்ட் காகிதம் விலை கிடுகிடு ; அட்டைப்பெட்டி உற்பத்தி பாதிப்பு
திருப்பூர்: கிராப்ட் காகித விலை தொடர்ந்து உயர்வதுடன், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த அட்டை பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.
இதுகுறித்து தென்னிந்திய அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க, கோவை மண்டல தலைவர் தண்டபாணி கூறியதாவது:
கழிவு காகிதத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறி, சத்தியமங்கலம், மடத்துக்கு ளம், சிவகாசி, ஒசூர் பகுதிகளில் உள்ள காகித ஆலைகள் கிராப்ட் காகிதம் விலை யை உயர்த்தி வருகின்றன. ஒரு டன் 31,000 ரூபாயாக இருந்த பேஸிக் கிராப்ட் காகிதம் விலை, ஒரே மாதத்தில் 36,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. வேறு சில ரகங்களின் விலையும் அதிகரித்துள்ளது.





