Economy, business and finance
கிராப்ட் காகிதம் விலை கிடுகிடு ; அட்டைப்பெட்டி உற்பத்தி பாதிப்பு

திருப்பூர்: கிராப்ட் காகித விலை தொடர்ந்து உயர்வதுடன், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த அட்டை பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.
இதுகுறித்து தென்னிந்திய அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க, கோவை மண்டல தலைவர் தண்டபாணி கூறியதாவது:
கழிவு காகிதத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறி, சத்தியமங்கலம், மடத்துக்கு ளம், சிவகாசி, ஒசூர் பகுதிகளில் உள்ள காகித ஆலைகள் கிராப்ட் காகிதம் விலை யை உயர்த்தி வருகின்றன. ஒரு டன் 31,000 ரூபாயாக இருந்த பேஸிக் கிராப்ட் காகிதம் விலை, ஒரே மாதத்தில் 36,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. வேறு சில ரகங்களின் விலையும் அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில் காகிதம் வாங்கு வதற்கான தொகையை செலுத்த 15 - 30 நாள் வரை அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது உடனடியாக பணம் செலுத்த சொல்கிறார்கள்.
இதனால் உற்பத்தி செலவு உயர்வு, மூலப்பொருள் தட்டுப்பாடு, திட்டமிட்டபடி அட்டை பெட்டி தயாரிப்பதில் சிக்கல், நிதி நெருக்கடி என உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றன.
கிராப்ட் கா கி தம் விலை உயர்வால் அட்டை பெட்டி தயாரிப்பு செலவு 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எனவே, அட்டை பெட்டிக்கான வி லையையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.