'பரிகாரப் போர்வையில் கிளி ஜோசியரின் ஆ@பாச வலை; கனடா தமிழ் பெண்ணுக்கு பெசன் நகர் பீச்சில் நேர்ந்த கொடூரம்!
தமிழைப் பூர்வீகமாகக் கொண்டு கனடாவில் வசித்து வரும் 29 வயது இளம் பெண் ஒருவர், சென்னையில் உள்ள ஒரு முன்னணித் தொலைக்காட்சியின் இசைப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கடந்த ஜனவரி மாதம் தனது தாயாருடன் சென்னை வந்துள்ளார். அவர் சென்னையில் தங்கிப் பாட்டுப் பயிற்சி பெற்று வந்த நிலையில், ஒரு மாதத்தில் அவரது தாயார் மட்டும் மீண்டும் கனடா திரும்பியுள்ளார்.
தனிமையில் வசித்து வந்த அந்தப் பெண் ரிலாக்ஸ் செய்ய கடந்த பிப்ரவரி மாதம் பெசன் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அங்குக் கிளிஜோசியம் பார்த்துக் கொண்டிருந்த சின்ன இசக்கிமுத்து குருசாமி என்பவரிடம் ஜோதிடம் பார்த்துள்ளார். அந்தப் பெண்ணின் தாயாருக்குப் புற்றுநோய் உள்ளது என்பது உள்ளிட்ட கடந்த காலத் துல்லியமான விபரங்களை அந்த ஜோசியர் கூறவே, அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அவரை நம்பி 70,000 பணத்தை ஜிபே மூலம் அனுப்பியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக அந்தப் பெண் தற்காலிகமாக கனடா சென்றிருந்தபோது, அவரது மொபைல் எண்ணுக்குத் தொடர்பு கொண்ட கிளிஜோசியர் சின்ன இசக்கிமுத்து, "உனது தாயின் உடலில் கடுமையான நச்சுக்களும், கெட்ட சக்திகளும் புகுந்துள்ளன. அது உனது உடலிலும் பரவாமல் இருக்க வேண்டும் என்றால் உடனடியாகப் பரிகாரம் செய்ய வேண்டும், இல்லையெனில் உயிருக்கே ஆபத்து" என்று கூறி அந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
