ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தை பதிவு செய்ய ஐகோர்ட் தடை அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
மதுரை: 'திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அறப்பணி செய்ய ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தொடர்பாக, எவ்வித ஆவணத்தையும் பதிவு செய்யக்கூடாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது.
மதுரை மாவட்டம், நெடுங்குளம் சுப்பிரமணியன் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருச்சி, ஸ்ரீரங்கம் திம்மராயசமுத்திரத்தில், 21 ஏக்கர், 6 சென்ட் நிலம் ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமானது.




