ஓட்டுநரில்லா தானியங்கி டாக்சியை அறிமுகப்படுத்திய 'டெஸ்லா' நிறுவனம்..!
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில், ஓட்டுநர் இல்லாத தானியங்கி டாக்சியை டெஸ்லா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Steering, break, accelerator என ஏதுமில்லாமல், 2 பேர் மட்டும் அமரக்கூடிய இந்த Cybercab-ஐ App மூலம் புக் செய்து பயன்படுத்தலாம் என டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல்கட்டமாக, டெக்சாஸஸிலும் புளோரிடாவிலும் போக்குவரத்து நெரிசல் இல்லாத புறநகர் பகுதிகளில் மட்டும் Cybercab அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மின்சார கார் சந்தையில், டெஸ்லா நிறுவனத்துக்கு சீன நிறுவனங்கள் கடும் போட்டி அளித்துவரும் நிலையில், ஓட்டுநரில்லா கார்கள் மூலம் லாபத்தை அதிகரிக்க டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


