Economy, business and finance
Tesla Cybercab: எதிர்கால பயணத்தை மாற்றப்போகும் ஸ்டீயரிங் இல்லாத கார்!

டெஸ்லா ஏற்கனவே மாடல் Y கார்களைக் கொண்டு ஒரு சிறிய ரோபோ டாக்ஸி சேவையை இயக்கி வருகிறது. எதிர்காலத்தில் இந்த சைபர்கேப் கார்களை தனது முக்கிய ரோபோ டாக்ஸி சேவையாக விரிவுபடுத்த டெஸ்லா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓட்டுநர் இல்லாத வாகனம் சைபர்கேப். இரு இருக்கைகள் கொண்ட இந்த மாடல், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தங்க நிற சைபர்கேப் வாகனம் ஸ்டீயரிங் வீல், பெடல்கள் இல்லாத முற்றிலும் தானாக இயங்கும் வாகனமாகும். இதனால், அவசரகால சூழ்நிலைகளில் கூட காரின் கட்டுப்பாட்டை பயணிகள் எடுக்க முடியாது.
ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் மீது பயணிகளிடையே நிலவும் தயக்கத்தைப் போக்க இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இதன் 'butterfly' போன்று மேல்திறக்கும் கதவுகள் முக்கிய கவரும் அம்சமாக பார்க்கப்படுகிறது.
ஓட்டுநரே இன்றி கேமரா அடிப்படையில் முழுமையான தானாக இயங்கும் முதல் கார் இது என்று டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதில் பயணிகள் ஸ்டீயரிங் பற்றி கவலைப்படாமல் உரையாடிக் கொண்டோ அல்லது புத்தகம் வாசித்துக் கொண்டோ பயணிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் வாசிக்க: நாம் இத்தனை காலம் படித்த உலக வரைபடம் தவறானதா..? ஐ.நா.வில் இன்று பரபரப்பு வாக்கெடுப்பு! | Mercator projection

