போஸ்டர் கும்மிடி அரசு பள்ளியில் ‘குஸ்தி’ மாணவியர் 8 பேர் ‘சஸ்பெண்ட்’
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியில், கோஷ்டி மோதலில் ஈடுபட்ட எட்டு மாணவியர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வாலிபர் ஒருவரை காதலிப்பது தொடர்பாக, கடந்த வாரம் மாணவியர் இடையே தகராறு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், இரு கோஷ்டிகளாக பிரிந்த மாணவியர், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
தகவலறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், இருதரப்பு மாணவியரையும் அழைத்து, சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சென்ற மாணவியர், திங்கட்கிழமை பள்ளி திறந்ததும் மீண்டும் மோதி கொண்டனர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
