பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை கடித்து குதறிய நாய்
பெ.நா.பாளையம்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, 17 வயது சிறுவன் பலாத்காரம் செய்ய முயன்றான். அவனை அந்த பெண்ணின் வளர்ப்பு நாய் கடித்து குதறி துரத்தி அடித்தது.
கோவை துடியலுார் என்.ஜி.ஜி.ஓ., காலனி நால்ரோடு அருகே புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் அருகே நேற்று அதிகாலை, 2.00 மணிக்கு சுமார், 30 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அமர்ந்து கொண்டு இருந்தார். அவர் அருகே அவருடைய வளர்ப்பு நாயும் இருந்தது. அங்கு வந்த, 17 வயது சிறுவன், அப்பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்றான். அந்தப் பெண் நள்ளிரவில் கூச்சலிட்டார். உதவிக்கு யாரும் வரவில்லை. அப்போது அந்தப் பெண்ணின் வளர்ப்பு நாய், 17 வயது சிறுவனின் காலை பிடித்து கடித்து குதறியது. இதனால் வலி பொறுக்க முடியாமல் அப்பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டான்.
இச்சம்பவம் அங்குள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்ற சிறுவனை கடித்து குதறி, தன்னுடைய எஜமானியை வளர்ப்பு நாய் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
