Crime, law and justice
கோவை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை விரட்டி விரட்டி கடித்த தெருநாய்

கோவை துடியலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல். சிசிடிவி காட்சியில் தெருநாய் காப்பாற்றியது. 16 வயது சிறுவன் கைது, கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு.
கோவை துடியலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குச் சாலையோரத்தில் பாலியல் துன்புறுத்தல் இழைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அசோகபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் குறித்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, சாலையோரம் படுத்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அதிர்ச்சி காட்சிகள் பதிவாகியிருந்தன.
சம்பவத்தின் போது, அப்பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டு தப்பிக்க போராடினார். அங்கிருந்த தெருநாயின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்த அந்த நபர் பெண்ணை விட்டுவிட்டு ஓடியதும், தெருநாய்கள் அவரைத் துரத்திச் சென்றதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இந்தக் காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவரை கைது செய்து பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
எடை குறைக்க ஜிம் போக தேவையில்லை... தினமும் 20 நிமிஷம், வீட்டிலேயே இந்த 5 பயிற்சிகள் செய்யுங்க!
இந்தப் பயிற்சிகளை செய்ய எந்தவித உபகரணமும் தேவையில்லை.
தினமும் 20 நிமிடம் என ஒதுக்கி, காலை நேரத்தில் இவற்றை செய்து வாருங்கள்.
இதன்மூலம் எடை இழப்பு, தொப்பை குறைப்பை எளிதாக சாத்தியப்படுத்தலாம்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

