முடக்கம்!
ஆலம்பரைகுப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அறிவிப்போடு... படகுகள் நிறுத்த இடமின்றி 36 மீனவ கிராம மக்கள் தவிப்பு
செய்யூர்: ஆலம்பரைகுப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என அறிவித்து ஆறு ஆண்டுகளாகியும் தற்போது வரை அடுத்தகட்டம் நகராமல் முடங்கியுள்ளதால், 36 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடப்பாக்கம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடலரிப்பு ஏற்பட்டு வருவதால், படகுகளை நிறுத்த இடமின்றி பரிதவித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கானத்துார் அடுத்த ரெட்டிக்குப்பம் தொடங்கி, இடைக்கழிநாடு அருகே ஆலம்பரைகுப்பம் வரை, 36 மீனவ கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில், 7,500க்கும் மேற்பட்ட மீனவர்கள், நாட்டு படகு, பைபர் படகு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.
