விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் இடைத்தேர்தல் தேதியை மாற்றணும்; ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதால், இடைத்தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்குமாறு தேர்தல் கமிஷனுக்கு ஹிந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு, வரும் அக்., 6ல் இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அந்த தொகுதிகளில், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. வரும், 14ம் தேதியன்று, அனைத்து வீதிகளிலும், வீடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், அந்த தொகுதிகளில், ஒலிபெருக்கி மற்றும் மேடை அமைக்க தேர்தல் கமிஷனில் அனுமதி பெற, அலைய வேண்டிய சூழ்நிலை உருவாகும். இது தவிர, பக்தர்கள் ஊர்வலமாக செல்லவும், நடைமுறை சிக்கல்கள் உருவாகும்.



