Politics
விநாயகர் சதுர்த்திக்காக இடைத்தேர்தல் தேதியை மாற்றணும்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. வரும் 14ம் தேதியன்று, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. தேர்தல் கமிஷன் கெடுபிடியால், விநாயகர் சதுர்த்தி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும். இது தவிர, பக்தர்கள் ஊர்வலமாக செல்லவும் நடைமுறை சிக்கல்கள் உருவாகும்.
விநாயகர் சதுர்த்தியின்போது தேர்தல் நடத்துவது, பக்தர்களையும், வியாபாரிகளையும் சிரமத்துக்கு உள்ளாக்கும். எனவே, இரு தொகுதிகளின் தேர்தல் தேதியை, தேர்தல் கமிஷன் மறுபரி சீலனை செய்து மாற்றி அறிவிக்க வேண்டும்.