அமைச்சர் கீர்த்தனா சொன்ன சிவகாசி இது அல்ல : பட்டாசுத் தொழிலாளர்களின் கண்ணீர்க் கதை!
“பட்டாசுத் தொழிலில் லஞ்சத்தை ஒழித்துவிட்டோம்… முந்தைய தி.மு.க. ஆட்சியில் லஞ்சம் வாங்கப்பட்டது. அதற்கான மின்னஞ்சல் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன” என்று சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கூறியிருக்கிறார். “சிவகாசி பட்டாசுத் தொழிலில் லஞ்சம் ஒழிந்து எல்லாம் சுத்தமாகிவிட்டதா?” என்ற கேள்வியுடன் பட்டாசு உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்களைச் சந்தித்தோம். சட்டமன்றத்தில் ஒலித்த அமைச்சர் கீர்த்தனாவின் குரலுக்கும், சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளின் வாசலில் கேட்கும் குரலுக்கும் இடையே உள்ள இடைவெளியை இவர்களுடைய பேட்டிகள் தெளிவாக உணர்த்துகின்றன.
தொழில் நல்லா இருக்கு என்கிறார்கள்… எங்கே நல்லா இருக்கு?
23 ஆண்டுகளாக பட்டாசுத் தொழில் சார்ந்த வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றி வரும் வெங்கடாசலபதி, பட்டாசு தொடர்பான பணிகளுக்காக கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், தாலுகா அலுவலகம் என வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு தொடர்ந்து சென்று வருபவர்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
