என்.எல்.சி.,யின் புதிய சேர்மனாக பிரசன்னகுமார் ஆச்சார்யா பொறுப்பேற்பு
நெய்வேலி செப்.18–: என்.எல்.சி., இந்தியா குழுமத்தின் புதிய சேர்மனாக அந்நிறுவனத்தில் நிதித்துறை இயக்குனராக பணியாற்றி வந்த பிரசன்னகுமார் ஆச்சார்யா நேற்று பொறுப்பேற்றார்.
ஒடிசாவின் கேந்திராபாராவை பூர்வீகமாக கொண்ட இவர், மின்சாரம், சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் உள்ள முன்னணி இந்திய நிறுவனங்களில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ஒடிசா உத்கல் பல்கலையில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் மற்றும் ஒடிசா கட்டாக்கில் உள்ள எம்.எஸ். சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். ஒடிசா ரேவன்ஷா பல்கலையில் வணிகவியல் முதுகலைப் பட்டம் மற்றும் முதுநிலை வணிக நிர்வாகவியல் பட்டமும் பெற்றுள்ளார்.

