திருப்பதி பெருமாளை நம் வீட்டுக்கே வரவழைக்கும் புரட்டாசி வழிபாடுகள்!
மனம் நிறைந்த பக்தியோடு ஏழுமலையானுக்கு மாவிளக்கு ஏற்றினாலே போதும்; தடைகளும் கிரக தோஷங்களும் விலகி, நாம் எண்ணிய காரியங்கள் எண்ணியபடி நிறை வேறும். அந்த வருடம் முழுவதும் பணவரவுக்கும் பொன் - பொருள் சேர்க்கைக்கும் பஞ்சமே இருக்காது!
பெருமாள் மாதம் என்று குறிப்பிடும் அளவுக்கு புண்ணியம் பெற்றுவிட்டது புரட்டாசி. இம்மாதத்தில் வரும் சனிக்கிழமை வழிபாடுகள் மட்டுமின்றி, வேறுசில விரத நாள்களும் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கது திருப்பதி கருடசேவை தரிசனம்!
நமக்காக கருடாழ்வார் கேட்டுப் பெற்ற வரம்!

