குடிகார தந்தை அடித்துக் கொலை: டி.வி.நல்லுார் அருகே மகன் கைது
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே குடித்து விட்டு போதையில் ரகளையில் ஈடுபட்ட தந்தையை, சம்மட்டியால் அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன், 50; கொத்தனார். இவரது மகன் அருண்குமார், 22; பி.காம்., பட்டதாரி.
அரசின் மது போதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று மனைவி மற்றும் மகளிடம் தகராறு செய்து வந்தார்.

