Crime, law and justice
போதையில் ரகளை செய்த தந்தையை கொன்ற மகன் கைது

விழுப்புரம்: மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட அரசன், 50, என்பவரை சம்மட்டியால் அடித்து கொன்ற அவரது மகன் அருண்குமார், 22, கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த, ஆலங்குப்பத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் அரசன்.
இவரது மகன் அருண்குமார், பி.காம்., பட்டதாரி. மதுபோதைக்கு அடிமையான அரசன், தினமும் தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், மது அருந்திவிட்டு குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த அருண்குமார், சம்மட்டியால் தாக்கியதில், மயங்கி விழுந்து அரசன் உயிரிழந்தார்.
திருவெண்ணெய் நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, அருண்குமாரை கைது செய்தனர்.