திராவிட அரசியலில் எம்.ஜி.ஆர். எழுச்சி! டைரக்டர் -ரைட்டர் -வி.சி.குகநாதன் (28)
(28) ஜெயலலிதாவா? பாக்யராஜா?
பெங்களூரிலிருந்து, உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்காக பாக்யராஜ் அவர்களுடன் தமிழ்நாடு எல்லையிலுள்ள இடங்களிலிருந்து ஆரம்பித்தோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதன் கழகப் பொறுப்பாளர், பாக்யராஜை வரவேற்று நம் வண்டியில் ஏறி முன்சீட்டில் அமர்ந்துகொள்வார். பின்னால் பாக்யராஜ், நான், ஹேம்நாக் பாபு. சேலத்தில் பூலாவாரி முருகேசன் சகோதரி வரவேற்றார். பிற்காலத்தில் அமைச்சராக வந்தவர். அவர் ஏற்பாடு செய்த இடங்களில் ஏகப்பட்ட கூட்டம். பாக்யராஜ் மேடைக்கு வருமுன் நான் மேடைக்குப் போவேன். ஏகப்பட்ட கூட்டமாக இருக்கும், பலபேரை கீழே இறக்கிவிடுவேன். அதன்பின்னரே பாக்யராஜ் மேடைக்கு வருவார். அவர் மிக சாமர்த்தியமாக குட்டிக்கதைகள் சொல்லி, நகைச்சுவை கலந்து பேச ஆரம்பிப் பார். எம்.ஜி.ஆர். குணநலன்.. அவரின் அரசியல் பணி குறித்து மிக்க சுவாரஸ்யமாகப் பேசுவார். எல்லா இடத்திலும் வியக்கும் அளவு கூட்டம் கூடியது. இதைப் பார்த்த போது வாரிசுப் போட்டி கண்டிப்பாக வரும் என நான் எதிர் பார்த்தேன். ஜெயலலிதாவா? பாக்யராஜா? என்று என் மனதில் அன்று தோன்றியது.
முதல்நாள் மதியம் இராமலிங்கம் வீட்டில் சாப்பாடு. பயணம் தொடர்ந்தது. போகப்போக கூட்டம் அதிகமானது. பாக்யராஜ் பேச்சிலும் வேகமும் விவேகமும் கூடியது. திருவண்ணா மலையில் ப.உ.சண்முகம் சார் வீட்டில் சாப்பாடு. போன இடமெல்லாம் பாக்யராஜைப் பார்க்க பெண்கள் கூட்டம் அதிகமானது. அடுத்து வேலூர் தொகுதிக்குள் நுழைந்ததும் ஏ.சி.சண்முகம் சார் வந்து காரில் ஏறினார். பல கூட்டங்களை பல ஊர்களில் முடித்துக்கொண்டு வேலூரில் மாபெரும் கூட்டம். பத்து மணிக்கு மேல்தான் அங்கு வரமுடிந்தது. அங்கும் லட்சக் கணக்கானோர் கலையாமல் காந்திருந்தனர். அங்கேயும் பாக்யராஜ் விளாசித் தள்ளினார். இரவோடு இரவாக சென்னை வந்துசேர்ந்தோம்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

