“திமுக உட்பட யாரும் பாஜகவை எதிர்த்து பேசுவதில்லை” – மாணிக்கம் தாகூர்
பாஜகவை எதிர்த்து திமுக உட்பட யாரும் பேசுவதில்லை. மே 4-க்கு பிறகு அனைவரும் அமைதியாகிவிட்டனர் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர், “மத்திய பாஜக அரசை பற்றி பேசுவதற்கு, எதிர்க்கட்சி (திமுக) உட்பட அனைவரும் இங்கு திடீரென அமைதியாகிவிட்டார்கள். யாரும் மே 4-க்கு பிறகு பேசுவதில்லை. தமிழ்நாட்டிற்கு வஞ்சனை செய்வதை ஆளும் கட்சி உட்பட அனைவரும் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது அவர்களின் கடமை” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “மத்திய பாஜக அரசு, தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்பது சி.ஏ.ஜி. அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பாஜக தென் மாநிலங்களை பார்க்கிறது. மத்திய பாஜக அரசை பற்றி பேசுவதற்கு எதிர்க்கட்சி (திமுக) உட்பட அனைவரும் இங்கு திடீரென அமைதியாகிவிட்டார்கள். யாரும் மே 4-க்கு பிறகு பேசுவதில்லை. காங்கிரஸ் தொடர்ந்து இதனை பேசுவோம். தமிழ்நாட்டிற்கு வஞ்சனை செய்வதை ஆளும் கட்சி உட்பட அனைவரும் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது அவர்களின் கடமை.


