மலைப்பாதையில் 12 கி.மீ., துாரம் நடந்தே வீடு திரும்பிய மாணவர்கள் முன் அறிவிப்பின்றி அரசு பஸ் ‘டிரிப் கட்’
நத்தம், செப்.9 திண்டுக்கல் மாவட்டம் செந்துறையில் இருந்து மலை கிராமங்கள் வழியாக இயக்கப்படும் அரசு பஸ் முன்
திண்டுக்கல் மாவட்டம் செந்துறையில் இருந்து மலை கிராமங்கள் வழியாக இயக்கப்படும் அரசு பஸ் முன் அறிவிப்பின்றி அடிக்கடி ‘டிரிப் கட்’ செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் மலைப்பாதை வழியாக 12 கி.மீ., துாரம் நடந்தே வீடு திரும்பும் அவல நிலை தொடர்கிறது.
வடமதுரை ஒன்றியம் பஞ்சந்தாங்கி, காக்காயன்பட்டி, மாமரத்துப்பட்டி, அண்ணா நகர், வ.புதுார் காலனி, நால்ரோடு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நத்தம் ஒன்றியம் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு மலை கிராமங்கள் வழியாக பஞ்சதாங்கியில் இருந்து செந்துறைக்கு தினமும் காலை 8:30 மணிக்கும், பின்னர் அங்கிருந்து மாலை 5.10 மணிக்கு பஞ்சதாங்கிக்கும் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.


