கோவையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட ஆவணங்கள் மாயம்: ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவு
கோவை வெளிவட்ட சாலை நிலம் கையகப்படுத்தல் தொடர்பான ஆவணங்கள் மாயம் குறித்து விரிவான விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில், வெளிவட்ட சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து விரிவான விசாரணை நடத்த, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில், வெளிவட்ட சாலை அமைக்கும் திட்டத்துக்காக, பட்டணம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள், 1974 ஆம் ஆண்டு துவங்கி, 1978 ஆம் ஆண்டு முடிவடைந்தது.



