கவுதம் ராம் கார்த்திக்கின் “ப்ளடி பாலிடிக்ஸ்” படத்தின் டீசர் நாளை வெளியீடு
கவுதம் ராம் கார்த்திக்கின் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தின் டீசர் நாளை காலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் கவுதம் ராம் கார்த்திக் கடல் படத்தில் அறிமுகமாகி தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, பத்து தல உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றிப்படமாகின. இதற்கிடையே, நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்துகொண்டார்.
கவின், அனுபமா தாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘டாடா’ படத்தை இயக்கியவர் கணேஷ் கே. பாபு. இவர் தற்போது நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தை தயாரித்து வருகிறார். தினா ராகவன் எழுதி, இயக்கும் இந்தப் படம் கவுதம் ராம் கார்த்திக்கின் 19-ஆவது திரைப்படம் ஆகும். கணேஷ் கே. பாபு புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இயக்குநர் ராஜூமுருகன் வசனம் எழுதியுள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை யுகபாரதி, கணேஷ் கே பாபு மற்றும் சௌமியா பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


