Arts, culture, entertainment and media
‘லேட்டஸ்ட் பாலிடிக்ஸ் என்ன சொல்லுது தெரியுமா...’ - பவர்ஃபுல் வசனங்களுடன் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’

தினா ராகவன் இயக்கத்தில் கௌதம் ராம் கார்த்திக் நடித்துள்ள படம் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’. இதில் செல்வராகவன், பி.வாசு, அஞ்சனா நேத்ரன், ராபி, ஏ.வெங்கடேஷ், லெனின் பாரதி, லொள்ளுசபா மாறன், பாக்கியம் சங்கர், ஆதித்ய கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு ‘டிராஃப்ட் பை ஜிகேபி’ என்ற பேனரில் தயாரித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதில் ஒவ்வொரு கட்சிக்கும் கொடி கம்பம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. மேலும் ‘அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் காலத்துல இருந்து நேத்து அரசியலுக்கு வந்த விஜய் வரைக்கும் அவங்களுடைய அரசியல் வாழ்க்கை ஆரம்பிக்கிறதே கட்சிக் கொடியை கம்பத்துல ஏத்துறதுல இருந்துதான்...’ என்று இடம் பெற்றிருந்த வசனம் ஹைலைட்டாக அமைந்தது.
இதையடுத்து பெரிதாக எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் மாணவராக இருக்கும் நாயகனிடம் வாத்தியார் ‘நீ என்னவாக ஆகணும்னு ஆசப்படுற’ எனக் கேட்க ‘அரசியல்வாதி’ என்ற பதிலுடன் ஆரம்பிக்கிறது. பிறகு அரசியல்வாதியாக உருவெடுக்கும் நாயகன் அதற்காக படும் பாடு அதில் மேலே போக வரும் எதிர்ப்பு அதனையும் கடந்து அவர் வென்றாரா இல்லையா என்ற கேள்வியுடன் முடிகிறது. இதனிடையே வசனங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
‘இப்பலாம் அரசியல்வாதிங்க எங்க போனாலும் ஐடி விங்கோடு தான் போறானுங்க. பேரறிஞர் அண்ணாவே வந்தாலும் பிரசாந்த் கிஷோர் இல்லாம ஜெயிக்க முடியாது’ என்று கட்சியில் இருக்கும் ஒருவர் பேசுவது, ‘நம்மள மாதிரி அன்னாட காட்சி எல்லாம் அரசியலுக்கு வந்தா அது நம்ம தின்னு செமிச்சிடும்’ என்று பி.வாசு பேசும் வசனம், ‘லேட்டஸ்ட் பாலிடிக்ஸ் என்ன சொல்லுது தெரியுமா, தரப்படாது பிடுங்குங்கள், திறக்கப்படாது அடிச்சு உடையுங்கள், அப்டின்னு சொல்லுது’ என ஏ.வெங்கடேஷ் பேசும் வசனம், ‘என்னைய மாதிரி பசங்களுக்கெல்லாம் என்னா ஆகனும்னு தான் தெரியும், எப்படி ஆகணும்னு இங்க எவனும் சொல்லித்தர மாட்டான்... நம்மளா அடிச்சி புடிச்சு தான் மேல வரணும்’ என்று கௌதம் கார்த்திக் பேசும் வசனம் அடங்கும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)