அமெரிக்க ராணுவம் செளதி, குவைத் உள்ளிட்ட நாடுகளில் இரான் தாக்குதலால் சந்தித்த அழிவை காட்டும் படங்கள்
இரானின் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் உள்ள பல அமெரிக்கத் தளங்களில் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை காட்டும் புகைப்படங்களை, பிபிசியின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமான சிபிஎஸ் பெற்றுள்ளது.
ராணுவத்தில் தற்போது பணியாற்றி வரும் வீரர்களால் வழங்கப்பட்ட இந்தப் புகைப்படங்களில், ரேடார் ஜெட் ஒன்று துண்டிக்கப்பட்டிருப்பதும், டிரெய்லர்கள் முற்றிலும் சேதமடைந்திருப்பதும், கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்திருப்பதும் காணப்படுகின்றன.
தேதி குறிப்பிடப்படாத இந்தப் புகைப்படங்கள், செளதி அரேபியா மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் முகாம்களில் எடுக்கப்பட்டவை.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


