பொதுமக்கள் டூவீலரில் வருவதற்கு அனுமதி இல்லை: டி.எஸ்.பி., தகவல்
முதுகுளத்துார்: பரமக்குடியில் செப்.,11ல் இம்மானுவேல் சேகரனார் குருபூஜையை முன்னிட்டு வெளியூரில் இருந்து வரும் மக்கள் டூவீலரில் வருவதற்கு அனுமதி இல்லை என்று டி.எஸ்.பி., சண்முகம் கூறினார்.
முதுகுளத்துாருக்கு உட்பட்ட கிராமத் தலைவர்களுடன் போலீசார் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., சண்முகம் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:
பரமக்குடியில் செப்.,11ல் இமானுவேல் சேகரனார் நினைவு நாளை முன்னிட்டு வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை. டூவீலரில் செல்வதற்கும் அனுமதி இல்லை. சொந்த வானங்களில் வருபவர்கள் டி.எஸ்.பி., அலுவலகத்தில் உரிய அனுமதி பெற்று போலீசார் கூறும் வழித்தடங்கள் மட்டும் செல்ல வேண்டும். அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்படாது.