பரிகாரம் செய்ய வந்த பெண்களுடன் உல்லாசம்: சிறுமியை சீண்டியதால் அம்பலமான சாமியாரின் தந்திரம்...!
சேலம்,வாழப்பாடி அருகே பரிகாரம் செய்வதாக கூறி பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிற
வாழப்பாடி அருகே பரிகாரம் செய்வதாக கூறி பெண்கள் மற்றும் சிறுமிகளை ஏமாற்றி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வெள்ளாளக்குண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜா. இவர், பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனங்களை பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். மேலும், தான் ஆன்மிகவாதி என்றும், பல்வேறு தோஷங்களுக்கு பரிகாரம் செய்வதாகவும் கூறி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், அவரது கடைக்கு சென்ற சிறுமி ஒருவரிடம் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். இதனை சிறுமி தனது பெற்றோரிடம் சென்று கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர்கள் இது குறித்து வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



