Crime, law and justice
சிறுமியிடம் பாலியல் தொந்தரவு போக்சோ வழக்கில் சாமியார் கைது
வாழப்பாடி; வாழப்பாடி, வெள்ளாளகுண்டத்தை சேர்ந்தவர் விஜயராஜ், 51. அதே பகுதியில் பழைய பிரிஜ், மிக்ஸி, கிரைண்டர் பழுதுபார்ப்பு கடை வைத்-துள்ளார்.
அவரது வீட்டில், 'சனீஸ்வரா பரிகார நிலையம்' பெயரில் மாந்திரீகமும் செய்கிறார். இவருக்கு மனைவி, மகன் உள்ளனர். 3 நாட்களுக்கு முன் சிறுமியை, பாலியல் தொந்தரவு செய்ததாக, அவ-ரது பெற்றோர் புகார்படி, விஜயராஜை, வாழப்பாடி மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கில் நேற்று முன்தினம் கைது
செய்தனர்.
போலீசார் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விஜயராஜிடம் நன்கொடை கேட்டு வந்த, அதே பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமியின் கன்னத்தை கில்லி, பாலியல் தொந்தரவில் விஜயராஜ் ஈடுபட்டார். அச்சிறுமிக்கு, 'லேப்டாப்' மூலம் ஆபாச வீடி-யோவை காட்டி, 'இதற்கு சம்மதம் தெரிவித்தால் பணம் தருகிறேன்' என கூறியுள்ளார்.
சிறுமி அங்கிருந்து வந்து, விஜயராஜ் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள், விஜ-யராஜ் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடு-பட்டனர். இதையடுத்து நாங்கள் சென்று, லேப்-டாப்பை சோதனை செய்தபோது ஆபாச வீடி-யோக்கள் இருந்தன. அது நேரில் எடுக்கப்பட்டதா என விசாரணை நடக்கிறது.