எங்கள் முன் அனைவரும் சமம்: ராகுல் மீதான அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
புதுடில்லி: '' எங்கள் முன் அனைவரும் சமம்,'' என காங்கிரஸ் எம்பி ராகுல் தொடர்பான அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்பி ராகுல் கடந்த 2022ம் ஆண்டு பாரத்ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது 2022 டிச.,16ல் நிருபர்களிடம் பேசிய ராகுல், எல்லையில் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும், அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா சீனா ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது எனவும் கூறினார்.
.ராகுலின் விமர்சனம் தொடர்பாக எல்லை சாலைகள் அமைப்பின் ( பிஆர்ஓ) முன்னாள் இயக்குனர் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா லக்னோவில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

