அமைச்சர் விக்னேஷூம் அறுபது திருடர்களும்..?!
த.வெ.க. அரசின் அமைச்ச ரவையிலிருந்து விக்னேஷ் விரைவில் வெளியேற்றப்படலாம். த.வெ.க. அமைச்சரவையில் சரிந்த முதல் விக்கெட்டாக விக்னேஷ் இருக்கலாம்' என அமைச்சரவையில் சரியும் முதல் விக்கெட் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் குறித்த செய்தி யினை கடந்த ஆகஸ்ட் 08-11 தேதியிட்ட இதழில் பதிவு செய்திருந்தோம். செய்தி யினை எச்சரிக்கை மணியாக ஏற்றுக் கொள்ளாமல், "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' என்பது போல அமைச்ச ருடன் இருக்கும் அறுபது நபர்கள் தங்கள் இஷ்டம் போல் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதால் கலகலத்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.
"கணபதியிலிருந்த விக்னேஷை சுந்தராபுரத்திற்கு அழைத்து வந்ததே நான்தான். எனக்கும் அவ...க்கும் உள்ள நட்பு ஊரறிந்த விஷயம். சொந்தமாக பார் நடத்தியிருக்கின்றோம். சில்லிங் செய்திருக்கிறோம். ஏன்... ஐ.பி.எல். பெட்டிங்கூட செய்திருக்கோம். மலுமிச்சம்பட்டியில் வழக்கே இருக்குன்னா எங்களுடைய நட்பு எப்படின்னு பாரு''. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷிடம் காரியம் சாதிக்க யார் வந்தாலும், இந்த வசனத்தை அப்படியே அடுக்கு மாறாமல், வார்த்தை மாறாமல் ஒப்பிப்பது ஐஸ்க்ரீம் பெயர் கொண்ட அவரின் வழக்கம். அமைச்சரும், அவரை அருகிலேயே இப்பொழுதுவரை வைத்திருக்கிறார். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு சென்றுவிட்டு காலையில் 7 மணிக்கே அமைச்சரின் இல்லம் வந்துவிட வேண்டுமென்பது அமைச்சரின் அன்புக்கட்டளை.
"அமைச்சர் கூடவே இருக்கிறார். அப்புறம் எப்படி அவரை நம்பாமல்? அந்த நம்பிக்கையின் அடிப்படையில் டாஸ்மாக்கில் பணி. தற்பொழுது எம்.ஆர்.பி. விலையை விட அதிக விலைக்கு விற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம். கோவை மாவட்டத்தில் மட்டும் 28 நபர்கள். அந்த இடத்திற்கு புதிதாக ஆட்களை போடலாம் என என்னிடம் அந்த ஐஸ்க்ரீம் பெயர் கொண்ட நண்பர் பேசியதால் மொத்தமாக ரூ.56 லட்சம் கொடுத்தேன். ஆனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர, மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களுக்கே பணியினை வழங்கியது டாஸ்மாக் நிர்வாகம். கொடுத்த ரூபாயை திரும்பக் கேட்டால் இனிமேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டால் அங்கு ஒவ்வொருவராக நம்முடைய ஆட்களை புதிதாக வேலைக்கு சேர்ப்போம் என்கிறார். இது நடக்கின்ற காரியமா? அமைச்சர் விக்னேஷிடம் கூறிவிட்டேன். அவரும் கண்டுகொள்வதாக இல்லை'' என கண்ணீர் வடிக்கிறார் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த தமிழின் பெயர் கொண்ட அந்த நபர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)