Politics
அமைச்சர் விக்னேஷூம் அறுபது திருடர்களும்..?!

த.வெ.க. அரசின் அமைச்ச ரவையிலிருந்து விக்னேஷ் விரைவில் வெளியேற்றப்படலாம். த.வெ.க. அமைச்சரவையில் சரிந்த முதல் விக்கெட்டாக விக்னேஷ் இருக்கலாம்' என அமைச்சரவையில் சரியும் முதல் விக்கெட் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் குறித்த செய்தி யினை கடந்த ஆகஸ்ட் 08-11 தேதியிட்ட இதழில் பதிவு செய்திருந்தோம். செய்தி யினை எச்சரிக்கை மணியாக ஏற்றுக் கொள்ளாமல், "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' என்பது போல அமைச்ச ருடன் இருக்கும் அறுபது நபர்கள் தங்கள் இஷ்டம் போல் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதால் கலகலத்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.
"கணபதியிலிருந்த விக்னேஷை சுந்தராபுரத்திற்கு அழைத்து வந்ததே நான்தான். எனக்கும் அவ...க்கும் உள்ள நட்பு ஊரறிந்த விஷயம். சொந்தமாக பார் நடத்தியிருக்கின்றோம். சில்லிங் செய்திருக்கிறோம். ஏன்... ஐ.பி.எல். பெட்டிங்கூட செய்திருக்கோம். மலுமிச்சம்பட்டியில் வழக்கே இருக்குன்னா எங்களுடைய நட்பு எப்படின்னு பாரு''. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷிடம் காரியம் சாதிக்க யார் வந்தாலும், இந்த வசனத்தை அப்படியே அடுக்கு மாறாமல், வார்த்தை மாறாமல் ஒப்பிப்பது ஐஸ்க்ரீம் பெயர் கொண்ட அவரின் வழக்கம். அமைச்சரும், அவரை அருகிலேயே இப்பொழுதுவரை வைத்திருக்கிறார். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு சென்றுவிட்டு காலையில் 7 மணிக்கே அமைச்சரின் இல்லம் வந்துவிட வேண்டுமென்பது அமைச்சரின் அன்புக்கட்டளை.
"அமைச்சர் கூடவே இருக்கிறார். அப்புறம் எப்படி அவரை நம்பாமல்? அந்த நம்பிக்கையின் அடிப்படையில் டாஸ்மாக்கில் பணி. தற்பொழுது எம்.ஆர்.பி. விலையை விட அதிக விலைக்கு விற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம். கோவை மாவட்டத்தில் மட்டும் 28 நபர்கள். அந்த இடத்திற்கு புதிதாக ஆட்களை போடலாம் என என்னிடம் அந்த ஐஸ்க்ரீம் பெயர் கொண்ட நண்பர் பேசியதால் மொத்தமாக ரூ.56 லட்சம் கொடுத்தேன். ஆனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர, மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களுக்கே பணியினை வழங்கியது டாஸ்மாக் நிர்வாகம். கொடுத்த ரூபாயை திரும்பக் கேட்டால் இனிமேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டால் அங்கு ஒவ்வொருவராக நம்முடைய ஆட்களை புதிதாக வேலைக்கு சேர்ப்போம் என்கிறார். இது நடக்கின்ற காரியமா? அமைச்சர் விக்னேஷிடம் கூறிவிட்டேன். அவரும் கண்டுகொள்வதாக இல்லை'' என கண்ணீர் வடிக்கிறார் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த தமிழின் பெயர் கொண்ட அந்த நபர்.
தமிழ்நாடு முழுவதும் ஆங் காங்கே எக2 பார் களை மூடுவதும், திறப்பதுமாக இருப்பது மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. "எதற்காக எக2 பாரை மூடுகின் றார்கள்?, எதற்காக மறுபடியும் திறக் கிறார்கள்?' என்ற கேள்வி எழுகின்றது. இந்த சான்றிதழ் இல்லை. சுகாதாரமில்லை என வாய்க்கு வந்ததைக் கூறிவிட்டு மூடிவிடுகின்றது டாஸ்மாக் நிர்வாகம். உடனடியாக மீண்டும் அதே பாரை திறக்கின்றது. எப்படி இது சாத்தியமாகிறது? அந்த
கண நேரத்திற்குள் குறிப்பிட்ட சான்றிதழ்கள் கிடைத்துவிடுகிறதா?, எதற்காக இந்த கண்ணாமூச்சி வேலை? அத்தனைக்கும் பின்னால் பணமே பிரதானம். பாரை மூடிவிட்டு அமைச்சர் விக்னேஷ் பெயரைக்கூறி பணம் பெறுகிறார்கள். பணம் பெற்றதும் மீண்டும் பார் திறக்க அனுமதி கொடுக்கிறார்கள். அமைச்சரின் கண்ணசைவு இல்லாமலா இது நடக்கும்?
சமீபத்தில் கோவையில் மூடப்பட்ட, திறக்கப்பட்ட எக2 பார்களை விசாரியுங்களேன்... விடை தெரியும். கட்டாய வசூல் செய்கின்றது அமைச்சரின் தரப்பு. நாளை இது எங்களுக்கும் நடக்கலாம் என்கின்றனர் தமிழ்நாட்டிலுள்ள 868 எக2 உரிமை யாளர்கள்.
கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் பார்கள் கொண்ட கடையிலும் இந்த நிலையே! அமைச் சர் விக்னேஷை சுற்றி எப்பொ ழுதும் 60 நபர்கள் இருப்பார்கள். அவர்கள்தான் அமைச்சர் பெயரைக்கூறி அனைத்து டாஸ் மாக் பார்களி லும் வசூலை துவக்கியிருக் கின்றனர்.
கோவை பீளமேடு பகுதி யில் கட்டாய வசூ லில் அமைச்சரின் ஆட்கள் ஈடுபட, அடிதடி வரை சென்றுள்ளது. அதன்பின் போலீஸ் வந்து மாமூலை வாங்கிக் கொடுத்து அனுப்பியிருக்கிறது. அமைச்சருக்கு தெரியாமலா இது இருக்கும்.? என்கிற கேள்வியும் சாமானியனிடம் உண்டு.
இது இப்படியிருக்க... டாஸ்மாக்கிற்கு பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின் மற்றும் வோட்கா போன்ற டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் நாளொன்றிற்கு 60 லட்சம் பெட்டிகளும், பீர் வகையில் 50 லட்சம் பெட்டிகளும் தேவை. தினந்தோறும் கையாளப்படும் பெட்டிகளின் எண்ணிக்கை சுமார் 55 லட்சம். ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி உள்ளிட்ட இன்ன பிற காரணங்களுக்காக எம்.ஆர்.பி. விலையிலிருந்து பாட்டிலுக்கு ரூ.10ஐ வாங்கினர் டாஸ்மாக் ஊழியர்கள். இது கரூர் கம்பெனிக்குத்தான் செல்கின்றதுன்னு கமெண்ட் அடித்து வாக்குகள் பெற்றார் இன்றைய முதலமைச்சர் ஜோசப் விஜய்.
ஆட்சிக்கு வந்தபிறகும் எம்.ஆர்.பி. விலையிலிருந்து பாட்டிலுக்கு ரூ10 வாங்கியது தொடரவே, இதற்கு கரூர் கம்பெனி காரணமல்ல என ஆய்வினை தொடங்கியது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை. டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சனையை குறைக்க, குடிமகன்கள் தலையில் பாட்டிலுக்கு ரூ10 விழாமல் இருக்க மதுபான ஆலைகளிடம் பேச்சுவார்த்தையை நடத்தியது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை. இதன் பலனாக பிராந்திப் பெட்டி ஒன்றிற்கு ரூ90, பீர் பெட்டி ஒன்றிற்கு ரூ 40 மற்றும் வைன், வோட்கா, விஸ்கி பெட்டி ஒன்றிற்கு ரூ 10 ரூபாய்களை ஊஷ்ற்ழ்ஹ ஊஷ்ஸ்ரீண்ள்ங் உன்ற்ஹ் என கூடுதலாக கட்டணங்களை கட்டி விடவேண்டும் என்றது.
இது நாளடைவில் பலன் கொடுத்த நிலையில், தாங்கள் அமைச்சரிடமிருந்து வருகின்றோம். இதோ அவரிடம் பேசுங்கள் என போனை கொடுத்து விட்டு பெட்டிக்கு ரூ15 தங்களுக்கு மட்டும் வேண்டுமென அடம்பிடித்துள்ளது. வழக்கத்தினை விட கூடுதல் கட்டணம் செலுத்துகின்றோம். அப்படியிருந்தும் ரூ.15 கூடுதலாக கேட்கலாமா..? உங்களுக்கு எதுக்கு ரூ 15? என போர்க்கொடி தூக்கி தலைமைவரை பிரச்சனையை கொண்டுசென்றுள்ளனர் மதுபான நிறுவனத் தார்.
இதேவேளையில் அமைச்சர் விக் னேஷிற்கு 100 ஏக்கர் அளவில் தோட்டம் தேவைப்படுகிறது என ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர், கோட்டூர் உள்ளிட்ட இடங்களில் தோப்புக்கள் பார்த்து அலை கின்றது அமைச்சரின் நண்பர்கள் குழு. இதற்காக ஆழியாறு அருகிலுள்ள லுலு மால் நிறுவனத்தாருக்கு சொந்தமான 88 ஏக்கரை ஏக்கர் ரூ.80 லட்சம் என விலையும் பேசியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றுஅமைச்சருக்காக இயங்குகின்றார்களா அமைச்சரின் அறுபது நபர்கள்? அமைச்சர் கண்டும் காணாமல் இருப்பதன் மர்மம் என்ன? அமைச்சர்தான் இவர்களை இயக்குகின்றாரா என்ற கேள்விக்கு அமைச்சர்தான் பதிலளிக்க வேண்டும்.
இப்பொழுது ரூ.10 அல்ல... ரூ.5?
"டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023, விற்பனையாளர்களுக்கு ரூ.30,284, உதவி விற்பனையாளர் களுக்கு ரூ.28,680 என ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.486.90 கோடி கூடுதல் செலவு ஏற்படும். மேலும் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்'' என சட்டமன்றத் தில் செப்டம்பர் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாவது எம்.ஆர்.பி விலையைக் காட்டிலும் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது குறையும் என்று எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு முழுவதும் பாட்டிலுக்கு ரூ.5 மட்டும் வாங்கிக்கொள்கின்றனர் விற்பனையாளர்கள். இதில் அவர்கள் கூறும் கணக்குதான் தலையை சுற்றுகின்றது. ரூ.2 அமைச்சருக்கு, ரூ.1 மாவட்ட நிர்வாகத்திற்கு, ரூ.2 அலுவலக தேவை மற்றும் அதிகாரிகள் உபசரிப்பிற்கு என பிரித்துக் காட்டியிருக்கின்றனர். ஆக இப்பொழுது ரூ.10 அல்ல ரூ.5.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)