16ம் தேதி திருப்பூரில் சர்வதேச பின்னலாடை கண்காட்சி; 38 நாடுகளின் வர்த்தகர்கள் பங்கேற்பு: ஏ.இ.பி.சி. அழைப்பு
திருப்பூர்: இந்திய சர்வதேச பின்னலாடை சங்கத்தின் (ஐ.கே.எப்.ஏ.,) சார்பில் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு (ஏ.இ.பி.சி.,) ஒத்துழைப்புடன், 53-வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி வரும், 16ம் தேதி திருப்பூரில் துவங்குகிறது.
இதுகுறித்து, ஏ.இ.பி.சி., மற்றும் இந்தியா நிட்பேர் சங்கத்தின் தலைவர் சக்திவேல் கூறியதாவது:
கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.கே.எப்.ஏ., வெற்றிகரமாக, 52 சர்வதேச கண்காட்சிகளை நடத்தியுள்ளது. இந்தாண்டின், 53-வது கண்காட்சி 'செயற்கை இழை ஆடைகளில் புதுமை மற்றும் நிலையான வளர்ச்சி மூலமாக பேஷனின் எதிர்காலம்' என்ற மையக் கருப்பொருளுடன் நடைபெறுகிறது. வரும், செப்., 16 முதல் 18ம் தேதி வரை மூன்று நாட்கள் ஐ.கே.எப்.ஏ., வளாகத்தில் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

