கோயில் நிலம் ஆக்கிரமிப்பு! அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!
கோயில் நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பான வழக்கில் அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!
மேற்கு மாம்பலத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர்களிடம் சொற்ப வாடகையை பெற்றுக் கொண்டு அவர்களை தொடர அனுமதித்திருப்பதற்கு இந்துசமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரூ.25 லட்சத்துக்கும் அதிகமாக வாடகை பாக்கி வைத்திருந்த, கோயில் நில ஆக்கிரமிப்பாளரிடமிருந்து வெறும் ரூ.1 லட்சம் அளவுக்கு வாடகை என்ற பெயரில் பெற்றுக் கொண்டு அவர்களை வாடகைதாரராகத் தொடர அனுமதித்திருப்பது எப்படி என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.


