போக்சோ வழக்கில் விதித்த 5 துாக்கு தண்டனை ரத்து; உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
மதுரை: சிங்கம்புணரி அருகே, ஐந்து சிறுமியரை பலாத்காரம் செய்ததாக பதிவான போக்சோ வழக்கில், சந்திரன், 45, என்பவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.
சிவகங்கை மாவட்டம், மருதிபட்டியைச் சேர்ந்த சந்திரன். விறகு வெட்டும் தொழிலாளி. இவர், 2024 பிப்., 4ல் ஒரு சிறுமியிடம், 'மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடலாம்' எனக்கூறி அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாகவும், மேலும் நான்கு சிறுமியரை தின்பண்டம் வாங்கி தருவதாகக் கூறி அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாகவும், திருப்புத்துார் மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்தனர்.
விசாரித்த சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம், 2026 ஏப்ரலில், வெவ்வேறு பிரிவுகளில் ஐந்து துாக்கு தண்டனை, ஆயுள் சிறை உள்ளிட்ட தண்டனைகளை விதித்து தீர்ப்பளித்தது.



