பல நாட்களாக தேங்கிய கழிவுநீரால் மக்கள் அவதி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே குமரய்யாகோவில் பஸ் ஸ்டாப் ராமேஸ்வரம் ரோட்டோரத்தில் கழிவுநீர்
ராமநாதபுரம் அருகே குமரய்யாகோவில் பஸ் ஸ்டாப் ராமேஸ்வரம் ரோட்டோரத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், துர்நாற்றத்தினால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரத்தில் ராமேஸ்வரம் ரோடு 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணியின்போது குமரய்யாகோவில் பஸ் ஸ்டாப் அருகே குழாய் பதித்தனர். அப்போது பாதாளாசாக்கடை குழாய் சேதமடைந்து கழிவுநீர் ரோட்டில் தேங்கியது. 5 நாட்களாகியும் இதுவரை சீரமைக்கப்படாமல் துர்நாற்றத்தினால் நோய்தொற்று அச்சத்தில் மக்கள் உள்ளனர். உடனடியாக கழிவுநீரை அகற்றி, குழாயை மாற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


