Lifestyle and human interest
பல நாட்களாக தேங்கிய கழிவுநீரால் மக்கள் அவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே குமரய்யாகோவில் பஸ் ஸ்டாப் ராமேஸ்வரம் ரோட்டோரத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், துர்நாற்றத்தினால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரத்தில் ராமேஸ்வரம் ரோடு 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணியின்போது குமரய்யாகோவில் பஸ் ஸ்டாப் அருகே பாதாளாசாக்கடை குழாய் சேதமடைந்து கழிவுநீர் ரோட்டில் தேங்கியது.
10 நாட்களாகியும் இதுவரை சீரமைக்கப்படாமல் துர்நாற்றத்தினால் நோய்தொற்று அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
உடனடியாக கழிவுநீரை அகற்றி, குழாயை மாற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.