காவிரி நீர் விநியோகிப்பதாக நிதி முறைகேடு மல்லணம்பட்டி மக்கள் குற்றச்சாட்டு
வத்தலக்குண்டு, செப்.9 மல்லணம்பட்டி ஊராட்சியில் ‘போர்வெல்’ மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வரும்
மல்லணம்பட்டி ஊராட்சியில் ‘போர்வெல்’ மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் காவிரி தண்ணீர் வழங்கப்படுவதாக ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வத்தலக்குண்டு ஒன்றியம் மல்லணம்பட்டி ஊராட்சியில் மல்லணம்பட்டி, அழகாபுரி, பூசாரிபட்டி, காலனி, கிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம் கிராமங்களில் 8000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பூ விவசாயமே இவர்களது முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கடும் வெயிலிலும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி பூ சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வூராட்சியில் காவிரி குடிநீர் விநியோகம் செய்வதாக ஒவ்வொரு மாதமும் ஊராட்சி நிதி ஒன்றியத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அனைத்து கிராமங்களிலும் ‘போர்வெல்’ மூலமாகவே குடிநீர் வழங்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். காவிரி தண்ணீருக்காக வழங்கப்படும் நிதி யாருக்கு செல்கிறது என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.
