பாக்., மாஜி பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரகசிய திருமணம்
லண்டன்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவியும், பிரிட்டன் திரைப்பட தயாரிப்பாளருமான ஜெமிமா கோல்டுஸ்மித், 52, பெரும் கோடீஸ்வர பைனான்சியரான கேமரன் ஓ ரெய்லியை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பிரிட்டனின் திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளருமான ஜெமிமா கோல்டுஸ்மித்தை, 1995ல் திருமணம் செய்தார்.
இவர்கள் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 2004ல் விவாகரத்து பெற்றனர். இத்தம்பதிக்கு சுலைமான் மற்றும் காசிம் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

