தசரா யானை அபிமன்யுவுக்கு புதிய கவுரவம் ஜம்பு சவாரி ஊர்வலத்தை நடத்துகிறது
மைசூரு: தசரா யானை அபிமன்யுவுக்கு, கர்நாடக அரசு புதிய கவுரவம் வழங்கியுள்ளது. ஜம்பு சவாரி ஊர்வலத்தை முன்நின்று நடத்தும் வாய்ப்பு, அபிமன்யுவுக்கு கிடைத்துள்ளது.
மைசூரு தசரா அக்டோபர் 11 ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. தசராவின் நிறைவு நாளில் நடக்கும் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க முதல்கட்டமாக ஒன்பது யானைகள், முகாம்களில் இருந்து மைசூருக்கு வந்துள்ளன.
அபிமன்யுக்கு ஓய்வு கடந்த 2020 முதல், 2025 வரை, ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை, அபிமன்யு யானை சுமந்து வந்தது.
