ரூ.2 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை ஐஸ்கிரீம் தயாரிப்பு இயந்திரங்கள் சென்னை கண்காட்சியில் இடம்பெற்றன
சென்னை: ஐஸ்கிரீம் தயாரிப்பு, விற்பனை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவும் வகை யில் சென்னை, வர்த்தக மையத்தில் கடந்த 10ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை இந்திய ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்காட்சி நடைபெற்றது.
வழக்கமாக தயாரிக்கப் படுவதற்கு மாற்றாக புளி, மிளகாய், இஞ்சி பிளேவர்களில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீம்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
பட்டர் ஸ்காட்ச், ஸ்டெபிலைசர், சாக்லேட் பவுடர், நட்ஸ் வகைகளும், விதவிதமான ஐஸ்கிரீம் பேக்கிங் பொருட்கள், இத்தாலி உள்ளிட்ட வெளிநாட்டு ஐஸ்கிரீம் வகைகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.


