சட்டவிரோத டூவீலர் ஸ்டாண்ட்: அலுவலர்களின் மெத்தனம்- நடவடிக்கை கோரும் பொதுமக்கள்
வடலூர் நகராட்சிப் பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக டூவீலர் ஸ்டாண்ட் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் நகராட்சிக்குச் சேர வேண்டிய பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சட்டவிரோதச் செயலைக் கட்டுப்படுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடலூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தின் முக்கிய மையப் பகுதியாக வடலூர் விளங்குகிறது. இங்கு உலகப் புகழ்பெற்ற வள்ளலார் தெய்வ நிலையம், அரசு தொழிற்பயிற்சி நிலையம், மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் வங்கிகள் அமைந்துள்ளன. இதன் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், ஏராளமான வாகனங்களும் வடலூரை கடந்து செல்கின்றன.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
