டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பதவிக்காலம் 5 ஆண்டு நீட்டிப்பு: நோயல் டாடா எதிர்ப்பு
புதுடில்லி: டாடா சன்ஸ் தலைவராக உள்ள சந்திரசேகரன், பதவிக்காலத்தை அடுத்த 5 ஆண்டுகள் நீட்டிக்க வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டாடா சன்ஸ் தலைவராக சந்திரசேகரன் உள்ளார். 63 வயதாகும் அவர் டாடா குழுமத்தில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 10 ஆண்டு காலம் தலைவராகவும் உள்ளார். இந்த பதவிக்காலம் 2027 பிப்.,20 ல் முடிவடைய உள்ளது. இந்த பதவியில் தொடர விரும்பவில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார். இதனையடுத்து புதிய தலைவரை தேடும் பணியில் டாடா சன்ஸ் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் இந்த பதவியில் தொடர்வதற்கு மும்பையில் நடந்த டாடா சன்ஸ் வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

