பெருந்துறை அரசு பாலிடெக்னிக்கில் ரத்த தான முகாம்
பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ரத்த தான முகாமில் பங்கேற்றவருக்கு சான்றிதழை வழங்குகிறாா் கல்லூரி முதல்வா் உமாமகேஸ்வரி.
கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், பெருந்துறை ரத்த வங்கி, கருமாண்டிசெல்லிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திங்களூா் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன சாா்பில் இந்த முகாம் நடத்தப்பட்டது. முகாமை, கல்லூரி முதல்வா் உமாமகேஸ்வரி தொடங்கிவைத்தாா். இதில், 21 மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினா். மேலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
