Politics
சி.முட்லுார் கல்லுாரியில் ரத்ததான முகாம்
கிள்ளை: சி.முட்லுார் அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லுாரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம்,
கிள்ளை: சி.முட்லுார் அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது.
கல்லுாரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம், என்.எஸ்.எஸ்., புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமை கல்லுாரி முதல்வர் நாகராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் சுடர்மதி, என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் மணிவர்மன், பிரபா, கோவிந்தன் முன்னிலை வகித்தனர். செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் விஷ்ணுபிரியா வரவேற்றார். 50 மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்.
முகாமில் தேசிய மாணவர் படை அலுவலர் தங்கபாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் மிதிலைராஜன், மருத்துவ அலுவலர் சுகனேஷ், சிதம்பரம் அரசு மருத்துவமனை டாக்டர் சிவகாமி, வட்டார மேற்பார்வையாளர் அன்புராஜ்,சுகாதார ஆய்வாளர் சுகுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.