சித்திரங்குடி சரணாலயம் நீர்வரத்து கால்வாய் துார்ந்து பறவைகள் வருகை இன்றி வெறிச்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தில் நீர்வரத்து கால்வாய் துார்ந்தும், சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பறவைகள் வருகையின்றி வெறிச்சோடியுள்ளது. சரணாலயத்தை துார்வாரி மேம்படுத்த வேண்டும். சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் 1989ம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு 40 ஹெக்டேரில் அமைந்துள்ளது. இங்குள்ள கருவேல மரங்களில் பலவகை புலம்பெயர்ந்த பறவைகள் கூட்டை காணலாம்.
சரணாலயத்திற்கு ஆஸ்திரேலியா, நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து கூழைக்கடா, கரண்டி மூக்கன், நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட ஏராளமான பறவைகள் ஆறு மாதங்கள் வரை தங்கி இனப்பெருக்கம் செய்த பின் திரும்புவது வழக்கம்.
இவற்றுடன் நீர் காகம், மீன்கொத்தி ஒற்றை வால் நாரை உள்ளிட்ட உள்நாட்டு பறவைகளும் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் சென்று வந்தனர்.


