தடைகளை விலக்கி வெற்றி தரும் பிரமாண்ட பிள்ளையார்... முல்பாகல் அருகில் குருடுமலை விநாயகர்!
சுமார் 14 அடி உயரத்தில் ஒரே கல்லாலான சாளக்ராம திருமேனியராக தரிசனம் தருகிறார் இந்த கணபதி. தம்மை வணங்குவோருக்கு வெற்றியைத் தருபவராம் இவர்.|தடைகளை விலக்கி வெற்றி தரும் குருடுமலை பிரமாண்ட பிள்ளையார்| Kurudumalai’s Grand Pillaiyar: Removing Obstacles and Bestowing Success
- நித்ய கல்யாணி - வேறெங்கும் காண்பதற்கரிய வகையில்... சுமார் 14 அடி உயரத்தில் ஒரே கல்லாலான சாளக்ராம திருமேனியராக தரிசனம் தருகிறார் இந்த கணபதி. தம்மை வணங்குவோருக்கு வெற்றியைத் தருபவராம் இவர்.
நான்கு யுகங்களாக அருள்பொலியும் விநாயகரின் திருக்கோயில் ஒன்று கர்நாடக மாநிலத்தில் அமைந்திருக்கிறது. சிவன், பிரம்மன், திருமால் ஆகிய மூவராலும் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இந்தப் பிள்ளையார் என்பது கூடுதல் சிறப்பு.
கர்நாடக மாநிலம் - கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள புண்ணிய க்ஷேத்திரம் முல்பாகல். இங்குள்ள குருடுமலையின் அடிவாரத்தில்தான் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் ஆகிய நான்கு யுகங்களாக அருள்பாலிக்கும் மகாகணபதி கோயில் கொண்டிருக்கிறார்.

