வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தவிர்க்க...33 குழுக்கள் !: நீர்நிலைகள், கால்வாய்கள் சீரமைக்க உத்தரவு
செங்கல்பட்டு: வடகிழக்கு பருவமழையையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, 33 கண்காணிப்பு குழுக்களை நியமித்து, கலெக்டர் வீரப்பன் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவினர், மாவட்டம் முழுதும் நடக்கும் பணிகளை ஆய்வு செய்து, மழைநீர் தேங்கும் பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2015 மற்றும் 2023ம் ஆண்டுகளில், பெய்த கனமழையால் செங்கல்பட்டு, செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய ஏழு தாலுகாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில், வழக்கத்தைவிட, அதிக மழை பெய்யும் சூழல் உள்ளது.



